திருப்பத்தூரில் தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்
தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் நோய் பரவும் அபாயம்
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகராட்சி, புதுப்பேட்டை ரோடு 3-வது தெருவில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் அப்பகுதி தெருக்களில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும் கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் மழை நீரோடு சேர்ந்து அந்த தெருவே கழிவுநீர் சாக்கடையாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து பொதுமக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்படும் நிலை உள்ளது.
கடந்த ஒரு வாரமாக இதே நிலை நீடித்து வருவதால் பொதுமக்கள் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும், கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக தெருக்களில் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்தப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story