‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி; இடிந்த மருதாண்ட வாய்க்கால் பாலம் தற்காலிகமாக சீரமைப்பு


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி; இடிந்த மருதாண்ட வாய்க்கால் பாலம் தற்காலிகமாக சீரமைப்பு
x
தினத்தந்தி 18 Nov 2021 11:49 PM IST (Updated: 18 Nov 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக இடிந்த மருதாண்ட வாய்க்கால் பாலம் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது.

லாலாபேட்டை, 
மருதாண்ட வாய்க்கால் பாலம் இடிந்தது
கரூர் மாவட்டம் லாலாபேட்டை தென்கரை வாய்க்கால் வழியாக மருதாண்ட வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் சுமார் ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இந்த வாய்க்காலின் மீது நெடுஞ்சாலைத்துறை மூலம் கடந்த 1920-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது.
இந்த பாலம் நாளுக்கு நாள் வலுவிழந்ததால் இதனை சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை்.
இந்தநிலையில் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மருதாண்ட வாய்க்கால் பாலம் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. மேலும் அப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் படத்துடன் செய்து வெளியிடப்பட்டது.
தற்காலிகமாக சீரமைப்பு
இதையடுத்து, மாயனூர் பொதுப்பணித்துறை  உதவி என்ஜினீயர் ஸ்ரீதர், நெடுஞ்சாலைத்துறை உதவி என்ஜினீயர் நாசர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் போர்க்கால அடிப்படையில் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்தனர். 
இதையடுத்து, செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story