அரக்கோணத்தி ல்ேகாவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ைள


அரக்கோணத்தி ல்ேகாவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ைள
x
தினத்தந்தி 18 Nov 2021 11:52 PM IST (Updated: 18 Nov 2021 11:52 PM IST)
t-max-icont-min-icon

ேகாவில் உண்டியலை உடைத்து காணிக்ைக பணம் கொள்ைள

அரக்கோணம்

பஞ்சாப் மாநிலத்தைப் பூர்விகமாகக் கொண்ட சீக்கியர்கள் வழிபடும் குருத்வாரா கோவில் காஞ்சீபுரம்-அரக்கோணம் சாலையில் ராஜாளி கடற்படை தளம் எதிரே உள்ளது. குருத்வாரா கோவில் முன்பு மரத்தாலான உண்டியல் உள்ளது. 

அந்த மர உண்டியலை மர்ம நபர்கள் யாரோ உடைத்து, அதில் பக்தர்கள் செலுத்தியிருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அதில் ரூ.10 ஆயிரம் காணிக்கை பணம் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 

குருத்வாரா கோவில் நிர்வாகி அமர்துசிங் அரக்கோணம் டவுன் போலீசில் புகார் ெசய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story