கிணற்றில் தவறி விழுந்து கோவை டாக்டர் பலி


கிணற்றில் தவறி விழுந்து கோவை டாக்டர் பலி
x
தினத்தந்தி 18 Nov 2021 11:55 PM IST (Updated: 18 Nov 2021 11:55 PM IST)
t-max-icont-min-icon

கிணற்றில் தவறி விழுந்து கோவை டாக்டர் பலியானார்.

கிருஷ்ணராயபுரம், 
கோவை மாவட்டம் ராமநாதபுரம் பங்கஜ மில் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மனைவி மலர் சாந்தி (வயது 49). இவர் பொள்ளாச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கிருஷ்ணராயபுரம் ஒன்றியம் திருக்காம்புலியூர் ஊராட்சியில் உள்ள எழுதியாம் பட்டியில் உள்ள தனது அக்காள் உமாமகேஸ்வரி வீட்டிற்கு மலர் சாந்தி வந்துள்ளார். நேற்று அங்குள்ள கிணற்றில் கை, கால்களை கழுவினார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி கிணற்றுக்குள் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த மாயனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண் டாக்டரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story