வாணியம்பாடி பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் காட்டாற்று வெள்ளத்தால் சாலை துண்டிப்பு
வாணியம்பாடி பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் சாலை் துண்டிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
வாணியம்பாடி
வாணியம்பாடி பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் சாலை் துண்டிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளை செந்தில்குமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
சாலை துண்டிப்பு
நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று பகல் முழுவதும் வாணியம்பாடி, ஆலங்காயம், அம்பலூர், திம்மாம்பேட்டை, உதயேந்திரம், வளையாம்பட்டு பூங்குளம், காவலூர் மற்றும் சுற்றுபகுதிகளில் இடைவிடாமல் தொடர் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் காட்டாறுகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் காவலூர்-நாயக்கனூர் சாலையில் உள்ள சாலையில் அரிப்பு ஏற்பட்டு 50 அடி தூரம் சாலை துண்டிக்கப்பட்டது. ஆலங்காயம், பூங்குளம் பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆண்டியப்பனூர் அணை நிரம்பி தண்ணீர் வெளியேறியதால் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நீர் புகுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டது. பாலாற்றின் கிளையாறுகளில் வெள்ளம் புகுந்ததால் பெரியபேட்டை, ஓம்சக்தி கோவில் வழியாக செல்லும் கிளையாறுகளில் பெரும் வெள்ளம் வந்தது. இதனால் ஓம்சக்தி கோவில் பகுதியில் உள்ள தரைப்பாலம், ஆசிரியர்நகர்- கச்சேரிசாலை இணைப்பு பாலம் வெள்ளத்தில் முழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
வீடுகளின் சுவர் இடிந்தது
வாணியம்பாடி நியூடவுனில் உள்ள தனியார் ஆண்கள் கல்லூரியின் வகுப்பறைக்குள் மழைநீர் புகுந்ததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். மேலும் இக்கல்லூரியின் 200 அடி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்கிடையே 2 மோட்டார் சைக்கிள்கள் சிக்கியது. வாணியம்பாடியில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலக சுற்றுச்சுவரின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. மேலும் நகரும் மற்றும் கிராமப்பகுதிகளில் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சுவர் இடிந்து விழுந்து சேதம் அடைந்தது.
கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை வாணியம்பாடி தொகுதி எம்.எல்.ஏ. கோ.செந்தில்குமார் நேரில் பார்வையிட்டு நகராட்சி மற்றும் வருவாய்த்துறை, பொதுப்பணிதுறை அதிகாரிகளை நேரில் வரவழைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
அப்போது நகர கூட்டுறவு வங்கி இயக்குனர் சதாசிவம், முன்னாள் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story