இரவல் வாங்கிய நகையை திருப்பிக் கேட்ட முதியவர் குத்திக் கொலை
பாடாலூர் அருகே இரவல் வாங்கிய நகையை திருப்பிக் கேட்ட முதியவர் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
பாடாலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் வசித்து வந்தவர் மணி (வயது 75). பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட இவர் தனிமையில் வசித்து வந்தார். இவரிடம், அப்பகுதியில் சில்லி சிக்கன் கடை வைத்து வியாபாரம் செய்து வந்த நாகப்பன்(45) ஒரு பவுன் நகையை இரவல் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த நகையை நாகப்பனிடம், மணி திருப்பி கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த நாகப்பன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் நாகப்பனை கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத்தி கிழித்தார்.
முதியவர் கொலை
இதில், படுகாயம் அடைந்த மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த கொலை குறித்து போலீசார் வழக்கு பதிந்து நாகப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story