மழைநீரில் மூழ்கி சிறுமி பலி
மழைநீரில் மூழ்கி சிறுமி பலியானாள்
செந்துறை
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள இரும்புலிக்குறிச்சி தெற்கு தெருவைச் சேர்ந்தவர்கள் கண்ணன்-விஜயா. இவர்களது மகள் சாதனா (வயது 4). இச்சிறுமி நேற்று காலை வீட்டிற்கு வெளிப்புறம் கழிவறை கட்ட தோண்டப்பட்டு, மூடப்படாமல் இருந்த குழியினுள் தவறி விழுந்து விட்டாள். சிறிது நேரத்திற்கு பிறகு குழந்தையை பெற்றோர் தேடினர். அப்போது குழிக்குள் தேங்கிய மழைநீரில் சாதனா மூழ்கி கிடந்ததை கண்டு பதறினர். பின்னர் குழிக்குள் இருந்து குழந்தையை தூக்கிய போது அவள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிய வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story