கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது


கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
x
தினத்தந்தி 19 Nov 2021 12:46 AM IST (Updated: 19 Nov 2021 12:46 AM IST)
t-max-icont-min-icon

கார்த்திகை பவுர்ணமி மற்றும் தீப திருவிழாவையொட்டி கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது

பெரம்பலூர்
கார்த்திகை மாத பவுர்ணமியையொட்டியும், கார்த்திகை மகா தீப திருவிழாவை முன்னிட்டும் நேற்று இரவு பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில், பிரம்மபுரீஸ்வரர் கோவில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. பெரம்பலூர் மதனகோபாலசுவாமி முன்பு தேரடி வீதியில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அப்போது மதனகோபாலசுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். இதேபோல் பிரம்மபுரிஸ்வரர் கோவிலில் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Next Story