நெல்லை-ஈரோடு பயணிகள் ெரயிலை மீண்டும் இயக்க வேண்டும்


நெல்லை-ஈரோடு பயணிகள் ெரயிலை மீண்டும் இயக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 Nov 2021 12:49 AM IST (Updated: 19 Nov 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை-ஈரோடு இடையேயான பயணிகள் ெரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என தென்மண்டல ெரயில்வே ஆலோசனை கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.

விருதுநகர், 
நெல்லை-ஈரோடு இடையேயான பயணிகள் ெரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என தென்மண்டல ெரயில்வே ஆலோசனை கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. வலியுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம் 
மதுரையில் தென்மண்டல ெரயில்வே ஆலோசனை கூட்டம் தென்னக ெரயில்வே துணை பொது மேலாளர் மல்லையா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள நிலையில் திருப்பரங்குன்றம் ெரயில் நிலையத்தை அனைத்து வசதிகளுடன் மேம்பாடு செய்ய வேண்டும். மதுரை - போடி வழித்தடத்தில் செக்கானூரணி ெரயில் நிலையம் மீண்டும் அமைக்க வேண்டும். சென்னை எழும்பூர் -கொல்லம் ரெயில் சிவகாசியில் நின்று செல்லவும், அனைத்து எக்ஸ்பிரஸ் ெரயில்களும் திருப்பரங்குன்றம், திருமங்கலம் ெரயில் நிலையங்களில் நின்று செல்லவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
கூடுதல் ரெயில் 
 நாகர்கோவில் -தாம்பரம் ெரயில் தினசரி ெரயிலாக இயக்க வேண்டும். தென் மத்திய மண்டல ெரயில்வே அனுமதித்துள்ள தாம்பரம் ஐதராபாத் சார்மினார் ெரயில் மதுரை வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும்.
நெல்லை- நாகர்கோவில் மற்றும் நாகர்கோவில் -திருவனந்தபுரம் பயணிகள் ெரயிலை இணைத்து ஒரே ெரயிலாக நெல்லை - திருவனந்தபுரம் ெரயிலாக இயக்க வேண்டும். திருவனந்தபுரம்- நாகர்கோவில் பயணிகள் ெரயில் நெல்லை வரை நீட்டிக்க வேண்டும். தற்போது இயக்கப்படும் டெமு ெரயிலை தூத்துக்குடி வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். கன்னியாகுமரி முதல் பாலராமபுரம் வரையுள்ள பகுதிகளை மதுரை கோட்டத்துடன் இணைக்க வேண்டும். மதுரை - நாகர்கோவில் இடையே இரட்டை ெரயில் பாதை பணிகள் முடிந்ததும் கூடுதல் ெரயில்களை இயக்க வேண்டும்.
கால அட்டவணை
 விருதுநகர் -  மானாமதுரை வழியாக இயக்கப்படும் கன்னியாகுமரி - புதுச்சேரி ெரயிலை தினசரி ெரயிலாக மாற்றி கால அட்டவணை மாற்றம் செய்து இயக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக பழனி, பொள்ளாச்சி வழியாக பாலக்காடு, போத்தனூர் வரை மற்றும் திருப்பூர் - ஈரோடு வழியாக கோவைக்கு மீண்டும் ெரயில்களை இயக்க வேண்டும்.
 மதுரையில் இருந்து வேளாங்கண்ணி, நாகூர் போன்ற பகுதிகளுக்கு ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த ெரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். இந்த ெரயில்களை பழைய கொல்லம் - தென்காசி - மதுரை ெரயிலுடன் உடன் இணைப்பு ெரயிலாக இயக்க வேண்டும். மதுரை போடி அகல ெரயில் பாதை பணிகளை விரைந்து முடித்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் இணைப்பு ெரயில் இயக்க வேண்டும். நெல்லை - ஈரோடு பயணிகள் ெரயில் இயக்க வேண்டும். விருதுநகர் ெரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும். சிவகாசி - திருமங்கலம் ெரயில்வே மேம்பாலம் தாமதமின்றி கட்டப்படவேண்டும். 
சாத்தூர் ெரயில் நிலையத்தை அனைத்து வசதிகளுடன் மேம்படுத்த வேண்டும். திருத்தங்கல் ெரயில் நிலையத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ெரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
 இவ்வாறு அவர் கூறினார்.


Next Story