சென்னம்பட்டி கால்வாயில் உடைப்பு


சென்னம்பட்டி கால்வாயில் உடைப்பு
x
தினத்தந்தி 19 Nov 2021 12:53 AM IST (Updated: 19 Nov 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

சென்னம்பட்டி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

காரியாபட்டி, 
சென்னம்பட்டி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. 
குடிநீர் தேவை 
மதுரை மாவட்டம், சென்னம்பட்டி அணைக்கட்டிலிருந்து காரியாபட்டி கே.கரிசல் குளம் கண்மாய் வரை சென்னம்பட்டி கால்வாய் வெட்டப்பட்டு உள்ளது. 
தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் சென்னம்பட்டி அணைக்கட்டிலிருந்து கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு வரும் வழியில் உள்ள கண்மாய்கள் நிறைந்து தற்போது காரியாபட்டி அருகே கரிசல்குளம் கண்மாய்க்கு தண்ணீர் வருகிறது. காரியாபட்டி கரிசல்குளம் கண்மாய் நிரம்பினால் காரியாபட்டி பேரூராட்சியில் உள்ள மக்களுக்கு குடிநீர் தேவை பூர்த்தி அடையும். 
நடவடிக்கை 
தற்போது பெய்துள்ள மழைக்கு சென்னம்பட்டி கால்வாயில் வரும் தண்ணீர் இலுப்பைகுளம் கண்மாய்க்கு மேற்கே உள்ள பள்ளிச்சான் கண்மாய் அருகே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் வீணாகி வருகிறது. சென்னம்பட்டி கால்வாயில் உடைப்பை சரி செய்து கரிசல்குளம் கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்ல பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க கரிசல்குளம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story