ஆண்டாள் கோவிலில் கார்த்திகை திருவிழா


ஆண்டாள் கோவிலில் கார்த்திகை திருவிழா
x
தினத்தந்தி 18 Nov 2021 7:26 PM GMT (Updated: 18 Nov 2021 7:26 PM GMT)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கார்த்திகை திருவிழா நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் கோவில் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தநிைலயில் இந்த விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்ட சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. வடபத்ர சயனர் பெரிய கோபுரம் முன்பு அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story