சங்கரன்கோவிலில் அய்யப்பசேவா சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் அய்யப்பசேவா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலில் கார்த்திைக தீபத்திருநாளையொட்டி சுவாமி, அம்பாள் வீதியுலா மற்றும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியை நடத்தக்கோரி அகில பாரத அய்யப்பா சேவா சங்கத்தினர் நேற்று தேரடி திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் என்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
செயலாளர் கதிர்வேல்ஆறுமுகம், பொருளாளர் சண்முகவேல், துணைச் செயலாளர்கள் சக்திவேல், தண்டபாணி, ஆறுமுகநயினார் சைவமரபினர் மகமை சங்க தலைவர் கோமதிநாயகம், தாமரைக் கழக முன்னாள் தலைவர் சங்கரசிந்தாமணி, பா.ஜனதா தொகுதி பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், பக்தர்கள் பேரவை ஒருங்கிணைப்பாளர் திருவள்ளுவர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story