சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவட்டார்,
திருவட்டார் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
இளம்பெண்
திருவட்டார் அருகே உள்ள கொக்கோட்டுமூலை வடக்கே கோணத்துவீட்டைச் சேர்ந்தவர் டென்னிசன். இவருடைய மனைவி ஹெலன் கிறிஸ்டி (வயது 34). டென்னிசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
இந்தநிலையில் நேற்று மதியம் ஹெலன் கிறிஸ்டி கொக்கோட்டு மூலையில் உள்ள நிதி நிறுவனத்துக்கு நகையை அடகு வைக்க சென்றார். பின்னர், அங்கிருந்து வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் வந்தனர்.
5 பவுன் சங்கிலி பறிப்பு
அந்த பகுதியில் உள்ள ஓடையின் கரை பகுதியில் சென்றபோது, மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த மர்ம நபர் ஹெலன் கிறிஸ்டி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தான். இதனால், அதிர்ச்சி அடைந்த ஹெலன் கிறிஸ்டி திருடன்... திருடன் என சத்தம் போட்டார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். பின்னர், இதுகுறித்து ஹெலன் கிறிஸ்டி திருவட்டார் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்து நகைப்பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை ேதடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story