அம்பை யூனியன் கூட்டம்


அம்பை யூனியன் கூட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2021 2:16 AM IST (Updated: 19 Nov 2021 2:16 AM IST)
t-max-icont-min-icon

அம்பை யூனியன் முதல் கூட்டம் நடந்தது.

அம்பை:
அம்பை யூனியன் முதல் கூட்டம் நேற்று நடந்தது. தலைவர் சிவனு பாண்டியன் என்ற பரணிசேகர் தலைமை தாங்கினார். ஆணையாளர்கள் குமரன், விஜயசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கவுன்சிலர் அருண் தவசுப்பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். யூனியன் துணைத்தலைவர் ஞானக்கனி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாரியம்மாள், ஆகாஷ், கஸ்தூரி, சுடலைமுத்து, சரஸ்வதி, ராமலட்சுமி, இசக்கியம்மாள், மற்றும் யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் யூனியன் தலைவர் சிவனு பாண்டியன் பேசுகையில், அம்பை யூனியனுக்கு சொந்தமான திருமண மண்டபம் பழுதடைந்து காணப்படுவதால் அதை அரசின் சிறப்பு நிதியில் இருந்து உடனடியாக புதுப்பித்து குறைந்த வாடகையில் நிகழ்ச்சிகள் நடத்த மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.  யூனியனுக்கு சொந்தமான குளங்களை தூர்வாரவும், யூனியன் பள்ளிகளுக்கு தேவையான கட்டிடங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு உரிய நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். முடிவில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மைதீன் நன்றி கூறினார்.


Next Story