பாக்கெட் சாராயம் விற்ற வாலிபர் கைது-மோட்டார் சைக்கிளும் பறிமுதல்


பாக்கெட் சாராயம் விற்ற வாலிபர் கைது-மோட்டார் சைக்கிளும் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Nov 2021 2:49 AM IST (Updated: 19 Nov 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

பாக்கெட் சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

தலைவாசல்:
தலைவாசல் அருகே பெரியேரி அணைப்பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு மோட்டார் சைக்கிளில் கடத்திச்சென்று சாராயம் விற்றதாக, ராமசேஷபுரம் கிராமத்தை சேர்ந்த பிரசாத் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 லிட்டர் பாக்கெட் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. 

Next Story