கோவில்பட்டியில் வியாபாரியிடம் 55 ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்த 3 கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்
கோவில்பட்டியில் வியாபாரியிடம் 55 ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்த 3 கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் வியாபாரியிடம் ரூ.55 ஆயிரம் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
வியாபாரியிடம் வழிப்பறி
கோவில்பட்டியை அடுத்துள்ள இலுப்பையூரணி பஞ்சாயத்து என்.ஜி.ஓ. காலனியில் குடியிருப்பவர் செல்லத்துரை (வயது 53). பூ வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு இலுப்பையூரணி கருப்பசாமி கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினார்.
அப்போது முகக்கவசம் அணிந்து வந்த 3 மர்ம நபர்கள், இவரது மோட்டார் ைசக்கிளை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். திடீரென்று கன்னத்தில் அடித்து மிரட்டி அவரிடம் இருந்த ரூ.55 ஆயிரம், செல்போனை ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்களாம்.
இதுகுறித்து செல்லத்துரை கோவில்பட்டி கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ராணி, சப்- இன்ஸ்பெக்டர் காந்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனிப்படை
இந்த நிலையில் இந்த 3 வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா தலைமையில் தனிப்படை அமைத்து, துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளார்.
Related Tags :
Next Story