பட்டாவில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்


பட்டாவில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 19 Nov 2021 7:29 PM IST (Updated: 19 Nov 2021 7:29 PM IST)
t-max-icont-min-icon

பட்டாவில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி அறிவுரையின்படி கோத்தகிரி அருகே உள்ள தேனாடு கிராமத்தில் பட்டாவில் திருத்தம் செய்ய சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு கோத்தகிரி தாசில்தார் சீனிவாசன் தலைமை வகித்தார். துணை தாசில்தார் ஜெயந்தி, வருவாய் ஆய்வாளர் வேல்மயில், கிராம நிர்வாக அலுவலர் திலகவதி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றனர். 

புல எண் மற்றும் உட்பிரிவில் தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தால் அதில் திருத்தம் செய்தல், பரப்பளவில் திருத்தம் மேற்கொள்ளுதல், பட்டதாரரின் பெயர், தகப்பனார் பெயர் மற்றும் பாதுகாவலர் பெயர் திருத்தம், உறவு முறையில் திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முகாமில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் உடனுக்குடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தகுதியுடையவர்களுக்கு உடனடியாக பட்டா மாறுதல் செய்யப்பட்டு உத்தரவு நகல் வழங்கப்பட்டது. இந்த முகாமில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


Next Story