விவசாயிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்


விவசாயிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்
x
தினத்தந்தி 19 Nov 2021 8:58 PM IST (Updated: 19 Nov 2021 8:58 PM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்

தாராபுரம், 
வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தாராபுரம், காங்கேயத்தில் விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள்.
விவசாயிகள் கொண்டாட்டம்
விவசாயிகளை பாதிக்கும் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற்றதால் தாராபுரத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அண்ணா சிலை முன்பு நேற்று பட்டாசு வெடித்தும்,  இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். இது தொடர்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் பல்வேறு போராட்டம் காரணமாக வாபஸ் பெறப்பட்டது. இது கடந்த ஒரு வருட காலமாக போராடிய விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.
 மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு உயிரை இழந்த விவசாயி குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். இது போன்று இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். பாராளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். ஓராண்டு காலமாக நடைபெற்று வந்த போராட்டத்தில் உயிரிழந்த 697 விவசாயிகளுக்கு வீரவணக்கம். இந்த போராட்டம் தற்போது வாபஸ் பெற்றாலும் தொடர்ந்து எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டி அறிக்கையில் குறிப்பிட்டது படி உற்பத்தி பொருளுக்கு உரிய விலை கிடைக்கும் வரை தங்கள் போராட்டம் தொடரும்.
இ்வ்வாறு அவர் கூறினார்.
இனிப்பு வழங்கினர்
அதுபோன்று திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டத்தை ரத்து செய்தது விவசாயிகளுக்கு கிடைத்த வெற்றி என கூறி தாராபுரம் காந்திசிலை அருகே பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும் அதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியின்போது தாராபுரம் காங்கிரஸ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காளிமுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் முருகானந்தம் மற்றும் அசோக் குமார் அக்கீம் கபூர் உள்ளிட்ட காங்கிரசார் கலந்துகொண்டனர்.

Next Story