செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்


செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 Nov 2021 9:04 PM IST (Updated: 19 Nov 2021 9:04 PM IST)
t-max-icont-min-icon

செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், 
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் கிராம சுகாதார செவிலியர்கள், சமூக நல செவிலியர்கள், பகுதி நேர செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலாமணி தலைமை தாங்கினார். கொரோனா தடுப்பூசி முகாமை ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்துவதை மாற்ற வேண்டும். வீடு, வீடாக சென்று தடுப்பூசி போட நிர்பந்திப்பதை கைவிட வேண்டும். இலக்கு நிர்ணயித்து அச்சுறுத்துவதை ரத்து செய்ய வேண்டும். முகாமை மாலை 5 மணிக்கு நிறைவு செய்ய வேண்டும். செவிலியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கிராம சுகாதார செவிலியர்கள் சங்கத்தின் தமயந்தி, சமூக நல செவிலியர்கள் சங்கத்தின் சாந்தாமணி, பகுதி நேர செவிலியர் சங்கத்தின் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில பொதுச்செயலாளர் உஷாராணி, பகுதி நேர சுகாதார செவிலியர் சங்கத்தின் நிர்மலா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Next Story