செய்துங்கநல்லூரில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலி திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்


செய்துங்கநல்லூரில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலி திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்
x
தினத்தந்தி 19 Nov 2021 9:14 PM IST (Updated: 19 Nov 2021 9:14 PM IST)
t-max-icont-min-icon

செய்துங்கநல்லூரில் ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 8 பவுன் சங்கிலி திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்

ஸ்ரீவைகுண்டம்:
நெல்லை மாவட்டம் வாணியங்குளம் முத்துவீரப்பபுரத்தைச் சேர்ந்த தேவதாஸ் மனைவி ஞானசவுந்தரி (வயது 74). இவர் நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து உடன்குடி செல்லும் பஸ்சில் ஏறி தனது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரது இருக்கை அருகில் நின்று கொண்டிருந்த சேலத்தை சேர்ந்த மீனாட்சி (30), சின்ன சேலத்தை சேர்ந்த முத்துமாரி (28) ஆகியோர் கர்ப்பிணி என்று கூறி அருகில் அமர்ந்துள்ளனர். பின்னர்  சத்திரம் அருகே உள்ள ஆட்சி மடம் ஊர் நிறுத்தத்தில் ஞானசவுந்தரி  இறங்கியுள்ளார். அப்போது தனது கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க சங்கிலியை காணாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக தனது உறவினருக்கு தகவல் தெரிவித்து, அவருடன் மோட்டார் சைக்கிளில் ஏறி விரைந்து சென்று  செய்துங்கநல்லூரில் பஸ்சை தடுத்து நிறுத்தினர். பஸ்சில் அவரது அருகில் அமர்ந்து பயணம் செய்த 2 பெண்களை பிடித்து சோதனை நடத்தியதில்,  8 பவுன் சங்கிலி இருந்தது. அவர்களை செய்துங்கநல்லூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அந்த 2 பேரையும் செய்துங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர்.

Next Story