தூத்துக்குடி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்
தூத்துக்குடி சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் ஆணையாளர் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கால்நடைகளால் விபத்து
துாத்துக்குடி மாநகராட்சியின் பிரதான சாலைகள் மற்றும் நகரில் போக்குவரத்து அதிகம் உள்ள தெருக்களில் அண்மைக்காலமாக கால்நடைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, விபத்துகள் அதிகரித்து வருகிறது. உயிர் சேத அபாயமும் எற்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி கட்டுப்பாடின்றி சுதந்திரமாக நடமாடும் கால்நடைகளினால் பொது மக்களுக்கு அச்சுறுத்தல், இடையூறு மற்றும் பொது சுகாதாரக் கேடு போன்ற இன்னல்கள் பெரும் பிரச்னையாக உள்ளது.
இதன் காரணமாக பொது மக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூராக சுற்றித் திரியும் கால்நடைகளை மாநகராட்சி சார்பில் பிடித்து கோசாலையில் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மாடு வளர்ப்பவர்கள் தங்களுக்கு சொந்தமான இடத்தில் கொட்டில் அமைத்து வளர்க்க வேண்டும்.
அபராதம்
தவறும் நிலையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் மாநகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு, பெரிய மாடு ஒன்றுக்கு ரூ.5 ஆயிரமும், சிறிய கன்று குட்டிக்கு ரூ.2 ஆயிரமும் அபராதமும் விதிக்கப்படும். மேலும், பிடிக்கப்படும் கால்நடை அரசு அங்கீகாரம் பெற்ற கோசாலையில் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story