கோவில்பட்டி அருகே சாலைஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த 24 ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

கோவில்பட்டி அருகே சாலைஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த 24 ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
x
தினத்தந்தி 19 Nov 2021 9:49 PM IST (Updated: 19 Nov 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே சாலைஓரத்தில் வைக்கப்பட்டு இருந்த 24 ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள ஜமீன்தேவர்குளம் கிராமத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாசில்தாருக்கு  தகவல் கிடைத்தது.
இதையொட்டி தாசில்தார் அமுதா தலைமையில்  வருவாய் ஆய்வாளர் கடல் குமார், தாலுகா வினியோக அதிகாரி நாகராஜன் ஆகியோர் ஜமீன் தேவர்குளம் கிராமத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கிராமத்துக்கு வெளியே சாலையோரத்தில்  24 ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர். அந்த. ரேஷன் அரிசி மூட்டைகளை யாரோ வெளியூருக்கு லாரியில் கடத்த முயன்றது தெரிய வந்தது. 
அங்கு கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் கோவில்பட்டி தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர். இந்த ரேஷன் அரிசியை கடத்தி வந்து சாலைஓரத்தில் வைத்தது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story