கார்த்திகை திருநாள் விழா
திருவாரூரில் கார்த்திகை தீப திருநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கோவில், வீடுகளில் தீபங்களை ஏற்றி பெண்கள் வழிபட்டனர்.
திருவாரூர்;
திருவாரூரில் கார்த்திகை தீப திருநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி கோவில், வீடுகளில் தீபங்களை ஏற்றி பெண்கள் வழிபட்டனர்.
கார்த்திகை தீப விழா
தீப ஒளி திருநாளாக கொண்டாடப்படும் கார்த்திகை தீப விழாவையொட்டி திருவாரூரில் கோவில், வீடுகளில் அகல் தீபங்கள் ஏற்றி பெண்கள் வழிபட்டனர். வெள்ளம் கலந்த அவல் பொறியை இறைவனுக்கு படைத்தனர். வீட்டு வாசல்களில் வண்ண கோலமிட்டு பூக்களை பரப்பி குத்து விளக்குகளை வைத்து, அதை சுற்றி அகல் விளக்குகளை பரப்பி தீபம் ஏற்றினர்.
சொக்கப்பனை
கார்த்திகை தீப திருநாளையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவில் கமலாலய குளத்தின் நடுவில் உள்ள நாகநாதர் கோவில், விஸ்வநாதர் கோவில், குமரகோவில், பழனியாண்டவர் கோவில், திருக்காரவாசல் தியாகராஜர் கோவில் உள்பட அனைத்து கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர் கோவில் வாசலில் பனை மட்டை அடுக்கி சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story