வீடூர் அணையில் இருந்து வினாடிக்கு 40700 கன அடி நீர் வெளியேற்றம்


வீடூர் அணையில் இருந்து  வினாடிக்கு 40700 கன அடி நீர் வெளியேற்றம்
x
தினத்தந்தி 19 Nov 2021 11:30 PM IST (Updated: 19 Nov 2021 11:30 PM IST)
t-max-icont-min-icon

வீடூர் அணையில் இருந்து வினாடிக்கு 40700 கன அடி நீர் வெளியேற்றம் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

விக்கிரவாண்டி

கனமழை காரணமாக வீடூர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரிநீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த  தாழ்வு நிலை காரணமாக விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான மேல்மலையனூர், பனமலைப்பேட்டை, செஞ்சி ஆகிய பகுதிகளில் கடந்த 2 தினங்களாக பலத்த மழை பெய்தது. 

இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியது. அணையின் மொத்த கொள்ளளவான 32 அடியில் 31 அடி நீர் இருப்பில் உள்ளது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடிநீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து வினாடிக்கு 40,700 கனஅடி நீர் 9 மதகுகள் வழியாக வெளியேற்றபட்டு வருகிறது. அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வீடுர் அணை தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியதால், வீடுர், பொம்பூர், சிறுவை, ஆகிய கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வீடூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


Next Story