அய்யனார் கோவில் பக்தர்களின்றி வெறிச்சோடியது
தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் ராஜபாளையம் அய்யனார் கோவில் பக்தர்களின்றி வெறிச்சோடியது.
ராஜபாளையம்,
தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் ராஜபாளையம் அய்யனார் கோவில் பக்தர்களின்றி வெறிச்சோடியது.
தரிசனத்திற்கு தடை
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அய்யனார் கோவில் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் மறு கரையில் நீர் காத்த அய்யனார் கோவில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தினத்தில் இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
இந்தநிலையில் வானிலை ஆராய்ச்சி மையம் தமிழகத்தில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் ஆற்றில் பக்தர்கள் புனித நீராடவும், சுவாமி தரிசனம் செய்யவும் நேற்று தடை விதித்தனர். எனவே நகரில் இருந்து 4 கி.மீ. தூரத்திலேயே தற்காலிக போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டு பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
பாதுகாப்பு பணி
மீறி வருபவர்களை தடுக்க மலை அடிவாரத்தில் வனத்துறையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அய்யனார் கோவில் பகுதி முழுவதும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் கொரோனா தொற்று பரவல் தடை காரணமாக சஞ்சீவி மலையில் உள்ள குமாரசாமி கோவிலில் நடைபெறும் திருக்கார்த்திகை வழிபாட்டில் சாமி தரிசனம் செய்யவும், மகாதீபம் ஏற்றும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள பக்தர்களுக்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story