முறுக்கு வியாபாரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்


முறுக்கு வியாபாரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்
x
தினத்தந்தி 20 Nov 2021 12:53 AM IST (Updated: 20 Nov 2021 12:53 AM IST)
t-max-icont-min-icon

முறுக்கு வியாபாரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்

 ஆம்பூர்

ஆம்பூர் டவுன் நடராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன் (வயது 50). இவர் ெரயில் நிலையங்களில் முறுக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது நடராஜபுரம் தரைப்பாலத்தின் மேல் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் ஆபத்தை உணராமல் குபேந்திரன் தரைப் பாலத்தை கடக்க முயன்றார். அப்போது அவர் நிலைதடுமாறி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.  இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story