பொதுமக்களுக்கு இடையூறு; 119 பேர் மீது வழக்கு
நெல்லையில் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக நின்ற 119 பேர் மீ வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நெல்லை:
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் நினைவு தினத்தையொட்டி, நெல்லை டவுன் பொருட்காட்சி திடலில் உள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக நேற்று முன்தினம் மதுரையில் இருந்து வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கார்களில் வந்தனர். அவர்கள் நெல்லை தச்சநல்லூர் உலகம்மன் கோவில் அருகே சாலையில் இறங்கி, பொதுமக்களுக்கு இடையூறாக நின்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தச்சநல்லூர் போலீசார், வெள்ளாளர் முன்னேற்ற கழக நிர்வாகி பந்தல் ராஜா உள்பட 119 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story