வீடு தேடி தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் சுகாதார செவிலியர்கள் போராட்டம்
வீடு தேடி தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் சுகாதார செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்:
வீடு தேடி தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிடக்கோரி சேலத்தில் சுகாதார செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் வீடு தேடி சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட வேண்டும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியில் உள்ள சிரமங்களை களைய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் நேற்று போராட்டம் நடந்தது.
சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த இந்த போராட்டத்திற்கு சங்க மாநில தலைவர் இந்திரா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கோகிலா, மாவட்ட செயலாளர் உமாமகேஸ்வரி உள்பட சுகாதார செவிலியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் வீடு தேடி தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
பணிச்சுமை அதிகரிப்பு
இந்த போராட்டத்தின் போது, கொரோனா தடுப்பூசி பணியில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மேற்கொள்வதால் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து மனஉளைச்சலுக்கு ஆளாகிறார்கள். எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் தடுப்பூசி போடும் பணியை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
தடுப்பூசி முகாம் பணிக்கு வாகன வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். தடுப்பூசி பணியில் அரசியல்வாதிகள் தலையீடு இல்லாமல் முற்றிலும் தடுக்கப்பட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
Related Tags :
Next Story