நர்சு தூக்குப்போட்டு தற்கொலை


நர்சு தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 20 Nov 2021 10:09 AM IST (Updated: 20 Nov 2021 10:09 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் நர்சு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்:
ஓசூர் தணிகை நகரை சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவர் ஓசூர் ஜுஜுவாடியில், டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி கல்பனா தேவி (வயது 36). இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, கபினேஷ் (8) என்ற மகனும், கபிஸ்ரீ (8) என்ற மகளும் உள்ளனர். கல்பனா தேவி, கடந்த 4 ஆண்டுகளாக ஓசூர் அரசு மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று, அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து ஓசூர் சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story