கனகம்மா சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த வெள்ளம் - நோயாளிகள் அவதி
கனகம்மா சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புகுந்த வெள்ளத்தால் நோயாளிகள் அவதியுற்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று காலையில் இருந்தே நல்ல மழை பெய்தது. அப்போது ஆற்காடு குப்பம் கொசஸ்தலை ஆற்றிலிருந்து வெளியேறிய உபரி நீரானது திருவள்ளூரை அடுத்த கனகம்மாசத்திரம் பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதியிலும், பஜார் வீதியிலும் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல், உபரி நீரானது அங்குள்ள கனகம்மா சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் புகுந்தது. இதனால் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் வெள்ளத்தில் நின்றவாறு நீண்ட நேரம் காத்துக் கிடந்தனர்.
மேலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வெள்ளம் சூழ்ந்து இருக்கும் நிலையிலேயே சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்பட்டது. இதனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர்கள், நோயாளிகள் மிகவும் அவதியுற்றனர்.
Related Tags :
Next Story