மாவட்ட செய்திகள்

மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது + "||" + 2 arrested for stealing motorcycle

மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது

மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது
தூத்துக்குடியில் மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்தவர் சிவபெருமாள். இவருடைய மகன் மகாலிங்கம் (வயது 40). இவர் கடந்த 18-ந் தேதி அன்று தூத்துக்குடி கோர்ட்டுக்கு எதிரே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கடைக்கு சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்தபோது, அவரது மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி போல்டன்புரத்தை சேர்ந்த மரிய மைக்கேல் மகன் அருண் ஜெரால்டு (30), மறவன்மடம் திரவியபுரத்தை சேர்ந்த அர்ஜூனன் மகன் முருகன் (29) ஆகிய 2 பேரும் சேர்ந்து மகாலிங்கத்தின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அருண் ஜெரால்டு, முருகன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கஞ்சா கடத்திய 2 பேர் கைது
திருக்குறுங்குடி அருகே கஞ்சா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. ஆட்டோ டிரைவர் வீட்டில் பொருட்கள் திருட்டு; 2 பேர் கைது
நெல்லை அருகே ஆட்டோ டிரைவர் வீட்டில் பொருட்கள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. மது விற்ற 2 பேர் கைது
சிவகிரி பகுதியில் மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. கஞ்சா விற்ற 2 பேர் கைது
தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. தடுப்புகளை சேதப்படுத்தி தடையை மீறிச் சென்ற 2 பேர் கைது
வேலூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் தடுப்புகளை சேதப்படுத்தி தடையை மீறிச் சென்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.