3 வேளாண் சட்டங்கள் ரத்து விவசாயிகளின் வெற்றிதினமாக கொண்டாட்டம்


3 வேளாண் சட்டங்கள் ரத்து   விவசாயிகளின் வெற்றிதினமாக கொண்டாட்டம்
x
தினத்தந்தி 20 Nov 2021 8:45 PM IST (Updated: 20 Nov 2021 8:45 PM IST)
t-max-icont-min-icon

3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதை விவசாயிகளின் வெற்றிதினமாக காங்கிரசார் கொண்டாடினர்.

திண்டுக்கல்:
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். அதில் சில விவசாயிகள் இறந்தனர். இந்த நிலையில் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதனை டெல்லியில் போராடிய விவசாயிகளின் வெற்றிதினமாக திண்டுக்கல்லில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதையடுத்து திண்டுக்கல்லில் உள்ள காமராஜர் சிலை முன்பு நடந்த நிகழ்ச்சிக்கு மாநகர தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். அப்போது டெல்லி போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் துணை தலைவர்கள் பொட்டு செல்வம், காஜாமைதீன், குப்புசாமி, விவசாய அணி மாவட்ட தலைவர் மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story