மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் ஆய்வு
ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை, கலெக்டர் செந்தில் ராஜ் ஆய்வு செய்தார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை, மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள்
தமிழ்நாட்டில் நகராட்சி, மாநகராட்சிகளுக்கு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதை அடுத்து ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை சரி பார்க்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்றது.
பின்னர் அந்த எந்திரங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் உள்ள குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் ஆய்வு
இந்த நிலையில வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குடோனுக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் நேற்று நேரில் சென்றார். அங்கு வாக்குப்பதிவு எந்தரங்களை ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது ஓட்டப்பிடாரம் தாசில்தார் நிஷாந்தினி, ஓட்டப்பிடாரம் யூனியன் ஆணையாளர்கள் வெங்கடாசலம், இப்ராஹிம் சுல்தான் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story