தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 20 Nov 2021 9:22 PM IST (Updated: 20 Nov 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:
தெருவில் தேங்கும் மழைநீர் 
நிலக்கோட்டை தாலுகா அணைப்பட்டி மேற்கு தெருவில் மழைநீர் வடிந்து செல்ல வசதி இல்லை. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் தெருவில் குளம் போல் மழைநீர் தேங்கி விடுகிறது. அதன்மூலம் கொசுக்கள் உருவாகி குழந்தைகளுக்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே மழைநீர் தேங்காமல் வடிந்து செல்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். -பாண்டியராஜன், அணைப்பட்டி.
சாக்கடை கால்வாய் தூர்வாரப்படுமா?
தேனி மாவட்டம் வீரபாண்டி பேரூராட்சி 15-வது வார்டில் செட்டியார் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய்களில் குப்பை, மண் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டு விட்டது. இதனால் கழிவுநீர் செல்லாமல் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுத்தொல்லையும் அதிகரித்து விட்டது. எனவே சாக்கடை கால்வாய்களை தூர்வார வேண்டும். -அன்புசெல்வன், வீரபாண்டி.
பயன்படாத சுகாதார வளாகம்
பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டி மேற்கு தெருவில் மகளிர் சுகாதார வளாகம் பயன்படாமல் உள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். -விஸ்வநாதன், பொம்மிநாயக்கன்பட்டி.
சாலையில் செல்லும் கழிவுநீர் 
தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் சுருளி அருவிக்கு செல்லும் வழியில் பள்ளிக்கு அருகே சாலையில் கழிவுநீர் செல்கிறது. அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - பிரபாகரன், காமயகவுண்டன்பட்டி.
குவிந்து கிடக்கும் குப்பைகள் 
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் பின்னால் உள்ள சாலையில் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. அந்த வழியாக மக்கள் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. சுகாதாரக்கேடு ஏற்படும் முன்பு குப்பைகளை அகற்ற வேண்டும். -மகாலட்சுமி, திண்டுக்கல்.


Next Story