போக்குவரத்து விதியை மீறிய ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்


போக்குவரத்து விதியை மீறிய ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 20 Nov 2021 9:47 PM IST (Updated: 20 Nov 2021 9:47 PM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில் போக்குவரத்து விதியை மீறிய ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கம்பம்:
கம்பம் நகரில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்து சிக்னலில் இருந்து காளியம்மன் கோவில் வரை உள்ள நகரின் பிரதான சாலையில் ஒரு வழிப்பாதை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தேனி, குமுளி மார்க்கமாக செல்லும் பஸ்கள் அனைத்தும் ஏ.கே.ஜி. திடல் வழியாக கம்பம் புதிய பஸ் நிலையத்திற்கு செல்கின்றன. 
இதேபோல் புதிய பஸ்நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய அனைத்து பஸ்களும் மாரியம்மன் கோவில், பழைய பஸ் நிலையம், சிக்னல் வழியாக சென்று வருகின்றன. ஒரு வழிப்பாதை கடைபிடிக்கப்பட்டு வந்தாலும் பழைய பஸ் நிலையத்தில் இருந்து போக்குவரத்து சிக்னல் வரை பஸ்கள் செல்லக்கூடிய பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். 
இதைத்தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறிய ஆட்டோ டிரைவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நேற்று நடவடிக்கை எடுத்தனர். அதன்படி, போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானபண்டிதநேரு தலைமையிலான போலீசார் விதிமீறிய ஆட்டோ டிரைவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் தொடர்ந்து விதிகளை மீறும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Next Story