நூதன முறையில் ரூ.92 ஆயிரத்தை மர்ம ஆசாமி திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நூதன முறையில் ரூ92 ஆயிரத்தை மர்ம ஆசாமி திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
குண்டடம்,
குண்டடம் பழைய மோட்டார் சைக்கிள் விற்பனை கடையில் நூதன முறையில் ரூ.92 ஆயிரத்தை மர்ம ஆசாமி திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
மோட்டார்சைக்கிள் விற்கும் கடை
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள பெரமியத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (வயது 45). இவர் குண்டடத்தில் கோவை ரோட்டில் சந்தைப்பேட்டை எதிரில் பழைய மோட்டார்சைக்கிள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடையில் சிவசுப்பிரமணியன் இருந்தபோது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தான், குண்டடம் அரசு வங்கியின் மேலாளர் என்றும், தனக்கு மோட்டார்சைக்கிள் ஒன்று தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனது காலில் அடிபட்டுள்ளதால் கடைக்கு வரமுடியாது, எனவே மோட்டார்சைக்கிளை எடுத்துக்கொண்டு வங்கிக்கு வருமாறு அந்த நபர் கூறியுள்ளார்.
ரூ.92 ஆயிரம் திருட்டு
உடனே, சிவசுப்பிரமணியன் கடையை திறந்தே வைத்துவிட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள வங்கிக்கு சென்றார். பின்னர் வங்கி முன்பு நின்றுகொண்டு செல்போனில் அழைப்பு வந்த எண்ணை தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. சந்தேகம் அடைந்து மீண்டும் மோட்டார்சைக்கிள் கடைக்கு வந்து பார்த்தார். அப்போது கடையில் மேஜை டிராயரை இரும்பு கம்பியால் நெம்பி அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.92 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவசுப்பிரமணியன் குண்டடம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.92 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.
பழைய மோட்டார்சைக்கிள் விற்பனை கடையில் நூதன முறையில் ரூ.92 ஆயிரம் திருட்டுப்போன சம்பவம் குண்டடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story