மாநகராட்சி அதிகாரியிடம் வாக்குவாதம் செய்த முன்னாள் கவுன்சிலர்
மாநகராட்சி அதிகாரியிடம் வாக்குவாதம் செய்த முன்னாள் கவுன்சிலர்
அனுப்பர்பாளையம்
திருப்பூர் மாநகராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட அங்கேரிபாளையத்தை அடுத்த ஏ.எஸ்.எம்.காலனி, துண்டுக்காடு, சுகம்நகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளிலும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெறுகிறது. இந்த பணிகள் மேற்கொள்ளும்போது அங்குள்ள சில குடிநீர் குழாய் உடைபடுவதாக கூறப்படுகிறது. இதனால் குழாய் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் குடிநீர் வீணாவதுடன், அந்த பகுதிக்கு குடிநீர் முறையாக சென்றடைவதில்லை. இதை சரிசெய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் துண்டுக்காடு பகுதியில் பாதாள சாக்கடை பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது அங்கு சென்ற 7-வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் பாலசுப்பிரமணியம் மாநகராட்சி அதிகாரிகளிடம் குழாய் உடைப்புகளை சரி செய்யுமாறு பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அங்கிருந்த மாநகராட்சி அதிகாரியிடம் கூறினார். ஆனால் அவர் முறையான பதில் கூறாமல் இருந்ததை தொடர்ந்து குழாய் உடைப்புகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும், அதன் பின்னரே புதிய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறி பாலசுப்பிரமணியம் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கிருந்த பொதுமக்களும் அடிப்படை வசதிகள் கேட்டு கோரிக்கை வைத்தால் அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்றும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் புகார் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story