நிச்சயம் செய்த மாப்பிள்ளை பிடிக்காததால் பெண்ணின் தந்தை தற்கொலை
சேத்தூர் அருகே நிச்சயம் செய்த மாப்பிள்ளை பிடிக்காததால் பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
தளவாய்புரம்,
சேத்தூர் அருகே கிருஷ்ணாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 51).இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இவரது மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இளைய மகளுக்கு நிச்சயதார்த்தம் இவரது வீட்டில் கடந்த வாரம் நடைபெற்றது.நிச்சயம் செய்யப்பட்ட மாப்பிள்ளை பெண்ணின் தந்தைக்கு பிடிக்காததால் அவர் மனவேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 18-ந்தேதி இரவு வீட்டிலிருந்த மூட்டைப்பூச்சி மருந்தை பாலகிருஷ்ணன் குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி சேத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
----------
Related Tags :
Next Story