போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு ‘தினத்தந்தி’ தலையங்கம் மிகவும் உதவுகிறது
போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு‘தினத்தந்தி’ தலையங்கம் பயனுள்ள மிகவும் உதவுகிறது என்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பாராட்டினார்.
காரைக்குடி,
போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு ‘தினத்தந்தி’ தலையங்கம் பயனுள்ள மிகவும் உதவுகிறது என்று சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பாராட்டினார்.
கருத்தரங்கு
சிவகங்கை மாவட்ட காவல்துறை சார்பில் அரசுப்பணிகளுக்கான போட்டி தேர்வு குறித்த கருத்தரங்கம் காரைக்குடியில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-
இன்றைய அறிவியல் உலகத்தில் மாணவர்களுக்கு படிக்கும் திறன் வெகுவாக குறைந்து வருகிறது. மாணவர்களின் கவனம் எல்லாம் பொழுதுபோக்கு சாதனங்களில்தான் உள்ளது. இதனால் நேரம் காலம் தெரியாமல் தங்களது முழு பொழுதையும் பொழுதுபோக்கு சாதனங்களில் செலவு செய்வதால் அவர்களுக்கு புத்தகம் வாசிக்க முடியாமல் போகிறது.
எனவே பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களுடன் இருந்தே கண்காணிக்க வேண்டும்.
30 ஆயிரம் புத்தகங்கள்
நான் புத்தகம் வாசிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவன். எனது வீட்டில் சுமார் 30 ஆயிரம் புத்தகங்களை வைத்துள்ளேன். அதில் சுமார் 6 ஆயிரம் புத்தகம் வரை படித்துள்ளேன். மேலும் பல்வேறு நூல்களையும் எழுதி மாணவர்களுக்கு வழங்கி உள்ளேன்.
என் வளர்ச்சிக்கு முதல் நண்பணாக இருந்தது இந்த புத்தகங்கள்தான். எனவே அரசு தேர்வுக்கு தயாராகி வரும் இளைஞர்கள் நல்ல புத்தகங்களை வாங்கி படித்து தங்களது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
‘தினத்தந்தி’ தலையங்கம்
செய்திதாள்களில் நாள்தோறும் வரும் அரசியல் சார்ந்த நிகழ்வுகள், நாட்டு நடப்புகள், விளையாட்டுகள், அரசின் பல்வேறு சட்டங்கள் ஆகியவற்றை நன்றாக படிக்க வேண்டும். தினமும் இளைஞர்கள் ஒரு மணி நேரமாவது செய்தித்தாள்கள் படிக்க வேண்டும்.
அதிலும் தினத்தந்தி நாளிதழில் தலையங்கம் பகுதியில் பல்வேறு அறிவு சார்ந்த பயனுள்ள தகவல்களை வழங்கி வருகிறார்கள். அதை போட்டித்தேர்விற்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தினந்தோறும் படித்து வந்தால் அவற்றில் இருந்து பல்வேறு தகவல்கள் கிடைக்கப்பெற்று, அவை தேர்வுக்கு மிகவும் உதவும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவர்கள், அரசு போட்டி தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள், போலீசார் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து மாணவர்களின் சந்தேகங்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் விளக்கம் அளித்து கலந்துரையாடினார்.
Related Tags :
Next Story