கார் மோதி கட்டிட தொழிலாளி பலி


கார் மோதி கட்டிட தொழிலாளி பலி
x
தினத்தந்தி 20 Nov 2021 11:25 PM IST (Updated: 20 Nov 2021 11:25 PM IST)
t-max-icont-min-icon

கார் மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.

ராமநாதபுரம், 
ராமநாதபுரம் அருகே உள்ள அம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமன் என்பவரின் மகன் ராஜா (வயது 40).இவரும் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகன் வேல்முருகன் (29) என்பவரும் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் நேற்று காலை ராமநாதபுரத்திற்கு வந்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர். 
அம்மன் கோவில் அருகே சென்றபோது அந்தவழியாக வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராஜா தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். படுகாயம் அடைந்த வேல்முருகன் சிகிச் சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story