விழுப்புரம் அருகே புருளியா எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் திடீர் கோளாறு 1 மணி நேரம் தாமதம்
விழுப்புரம் அருகே புருளியா எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் திடீர் கோளாறு 1 மணி நேரம் தாமதம்
விழுப்புரம்
விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, வழியாக மேற்கு வங்காள மாநிலம் புருளியாவுக்கு வாரந்தோறும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரத்தில் இருந்து நேற்று பகல் 12.15 மணியளவில் புருளியாவுக்கு புறப்பட்டது. பகல் 12.30 மணியளவில் விழுப்புரத்தை அடுத்த வெங்கடேசபுரம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் அந்த ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது.
பின்னர் இதுபற்றிய தகவல் அறிந்து விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து விரைந்து வந்த தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் என்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் என்ஜின் கோளாறை எளிதில் சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து மாற்று என்ஜின், வெங்கடேசபுரத்திற்கு புறப்பட்டுச்சென்றது. தொடர்ந்து, புருளியா எக்ஸ்பிரஸ் ரெயிலின் பழுதான என்ஜின் அப்புறப்படுத்தப்பட்டு அதற்கு பதிலாக மாற்று என்ஜின் பொருத்தப்பட்டது. அதன் பிறகு அந்த ரெயில் 1 மணி நேரம் தாமதமாக மதியம் 1.45 மணியளவில் வெங்கடேசபுரத்தில் இருந்து புருளியாவுக்கு புறப்பட்டது. ரெயிலின் இந்த தாமதம் காரணமாக பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
Related Tags :
Next Story