15 நாட்களாக பெய்யும் தொடர்மழையால் வெள்ளத்தில் மிதக்கும் வாணியம்பாடி நகரம்
தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வாணியம்பாடி நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
வாணியம்பாடி
தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் வாணியம்பாடி நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.
தொடர்மழை
வாணியம்பாடி மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் கடந்த 15 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் மழையால் பாலாற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக வாணியம்பாடி, ஆலங்காயம் பகுதியில் தொடர் மழையால் பல ஏரிகள் நிரம்பி வழிந்தன இதனால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் வாணியம்பாடி நகருக்குள் புகுந்த வெள்ளத்தால் பல தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது.
தண்ணீரில் மூழ்கியது
இதேபோல் நகரில் உள்ள ஆத்துமேடு பாலம், ஓம் சக்தி கோவில் அருகில் உள்ள பாலம், காதர்பேட்டை-கச்சேரி ரோடு இணைப்பு பாலம், வளையாம்பட்டு-கச்சேரி ரோடு இணைப்பு பாலம், பெரியபேட்டை இணைப்புப் பாலம் ஆகியவை தண்ணீரில் மூழ்கியது, இதனால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது ஜின்னா மேம்பாலம் மட்டுமே உள்ளதால் அனைத்து வாகனங்களும் அந்த பாலத்தில் செல்வதையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் வாணியம்பாடி நகரில் மேட்டுப்பாளையம் பகுதியை இணைக்கும் பாலத்திர. வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து வேடிக்கை பார்த்து செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது
நகரப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பல இடங்களில் வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. 300-க்கு மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மிதப்பதால் அங்கு இருந்தவர்கள் பாதுகாப்பாக பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு மற்றும் இதர பொருட்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வழங்கி வருகின்றனர். கிராமப் பகுதிகளிலும் இதே நிலை நீடிப்பதால் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
நிவாரண உதவிகள்
பாதிக்கப்பட்ட பகுதிகளை வாணியம்பாடி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., சம்பத்குமார், கூட்டுறவு வங்கி தலைவர் சதாசிவம்உள்பட பலர் பார்வையிட்டு அங்குள்ளவர்களுக்கு நிவாரண உதவிகளை செய்தனர், இதேபோல் பலர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
வாணியம்பாடி நகர பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றும் பணியில் நகராட்சி நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர் .
Related Tags :
Next Story