வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்த முகாம்
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நேற்று நடைபெற்றது.
கரூர்,
சிறப்பு முகாம்கள்
கரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறைத்திருத்தம், 2022-ம் ஆண்டு பணிகள் மேற்கொள்ளப்படுவது தொடர்பாக, புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டு, கரூர் மற்றும் குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து தாசில்தார் அலுவலகங்கள், கரூர் மாநகராட்சி மற்றும் குளித்தலை நகராட்சி அலுவலகங்கள் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகிய இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
மேலும், 1-1-2022 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரினை சேர்க்கவும் மற்றும் வாக்காளர்களாக பதிவு செய்ய தகுதியுள்ள அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் இடமாற்றம் செய்ய ஏதுவாக இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி நேற்று சிறப்பு முகாம்கள் நடைபெற்றன.
விண்ணப்பங்கள்
இந்த முகாமில் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்கவும் மற்றும் ஏராளமானோர் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி திருத்தம் மற்றும் பெயர் நீக்கம் உள்ளிட்டவைக்கும் விண்ணப்பங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்தனர். முகாமில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த வாக்குச்சாவடி நிலை முகவர்கள் உதவிபுரிந்தனர்.
விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளது. இதேபோல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 27, 28-ந்தேதிகளிலும் நடக்கிறது.
Related Tags :
Next Story