பணம் திருடியவர் கைது


பணம் திருடியவர் கைது
x
தினத்தந்தி 21 Nov 2021 1:26 AM IST (Updated: 21 Nov 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம் வ.களத்தூர் கிராமத்தை சேர்ந்த சாமிராஜின் மகன் பிரப. இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் ஏஜென்சியில் விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று லெப்பைக்குடிகாடு பஸ் நிறுத்தம் அருகே உள்ள மளிகை கடைக்கு முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு, கடை உரிமையாளரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, மொபட்டின் பெட்டியை திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தை சேர்ந்த ராமசாமி மகன் மாரி(38), சாவி மூலம் திறந்து பணப்பையை எடுத்து கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை சுற்றி வளைத்து பிடித்து மங்களமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டவர் வழக்குப்பதிவு செய்து மாரியை கைது செய்து, அவர் திருடிய ஆயிரம் ரூபாயை மீட்டார்.

Next Story