விசுவக்குடி நீர்த்தேக்கம் நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை


விசுவக்குடி நீர்த்தேக்கம் நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Nov 2021 7:56 PM GMT (Updated: 20 Nov 2021 7:56 PM GMT)

விசுவக்குடி நீர்த்தேக்கம் நிரம்பியதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர்:
பச்சைமலை பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா விசுவக்குடி நீர்த்தேகத்திற்கு அதிகமான நீர்வரத்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் விசுவக்குடி நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் நீர்வரத்து முழுவதும் வெங்கலம் ஏரி வழியாக கல்லாற்றுக்கு அதிகப்படியான நீர் செல்ல உள்ளது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே வெங்கலம், வெண்பாவூர், வடகரை, பாண்டகபாடி, மறவநத்தம், என்.புதூர், விகளத்தூர் ஆகிய கிராம மக்கள் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மேலும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு சென்று பார்வையிடவோ, நீர் நிலைகளை கடந்து செல்லவோ வேண்டாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story