தேவூர் அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 7 பவுன் நகை திருட்டு-மர்ம நபர்கள் கைவரிசை


தேவூர் அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 7 பவுன் நகை திருட்டு-மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 21 Nov 2021 1:47 AM IST (Updated: 21 Nov 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

தேவூர் அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் 7 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

தேவூர்:
தேவூர் அருகே வட்டமலை எதிர்மேடு பகுதியில் ஆசிரியர் காலனி எதிரில் வசித்து வருபவர் நடேசன் (வயது 70). இவருடைய மனைவி சம்பூர்ணம் (65). இவர்கள் இருவரும் ஒரு அறையிலும், இவருடைய மகள் சுதா, மருமகன் செல்வமணி, இவர்களின் 12 வயது மகள் ஆகிய 3 பேர் மற்றொரு அறையிலும் நேற்றுமுன்தினம் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் வீட்டின் பின்புற கதவை திறந்து கொண்டு வந்த மர்ம நபர்கள், சுதா, செல்வமணி இருந்த அறையின் கதவின் தாழ்ப்பாள் கதவை திறக்க முடியாதபடி துணியால் கட்டினர். பின்னர் மூதாட்டி சம்பூர்ணம் இருந்த அறைக்கு சென்ற மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்தனர். அப்போது கண் விழித்த சம்பூர்ணம் தாலியை கையில் பிடிக்க, நகையை மட்டும் எடுத்துக்கொண்டு ஓடி விட்டனர். இதில் தாலி மட்டும் தப்பியது. இந்த சம்பவம் குறித்து தேவூர் போலீசில் சம்பூர்ணம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story