பிளஸ்-2 மாணவியை கற்பழித்த பஸ் டிரைவர் மீது வழக்கு
பிளஸ்-2 மாணவியை கற்பழித்த பஸ் டிரைவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஓமலூர்:
மேச்சேரி அருகே உள்ள ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ஒருவர் தனது அக்காள் மகளான 17 வயது பிளஸ்-2் மாணவியை ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் அந்த சிறுமிக்கு வயிற்று வலி ஏற்படவே மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமி கற்பழிக்கப்பட்டது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்காதேவி மற்றும் போலீசார் பஸ் டிரைவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story