சின்னமுட்டம் கடலில் நீச்சல் போட்டி
கன்னியாகுமரி சின்னமுட்டம் கடலில் நேற்று நீச்சல் போட்டி நடந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி சின்னமுட்டம் கடலில் நேற்று நீச்சல் போட்டி நடந்தது.
நீச்சல் போட்டி
உலக மீனவர் தினம் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி நேற்று கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் நீச்சல் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் 10 நீச்சல் வீரர்கள் கலந்து கொண்டனர். கடலில் நடந்த ஆயிரம் மீட்டர் நீச்சல் போட்டியில் மணக்குடியை சேர்ந்த விமல் ராஜ் முதல் பரிசும், கன்னியாகுமரியை சேர்ந்த நூர்ஜின் 2-வது பரிசும், கன்னியாகுமரியை சேர்ந்த சூசை ஆண்டனி 3-வது பரிசும் வென்றனர்.
இன்று பரிசு
இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் மேரி பேசில் பிந்து, கடலோர அமலாக்க பிரிவு ஆய்வாளர் அன்ன பாலா, மீன்வளத்துறை சார்பு ஆய்வாளர் லிபின் மேரி, கடலோர பாதுகாப்பு குழும சார்பு ஆய்வாளர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கடல் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.1500 இன்று (ஞாயிற்றுக்கிழமை)வழங்கப்படுகிறது.
Related Tags :
Next Story