புதிய கட்டிடம் கட்டுமான பணி மும்முரம்


புதிய கட்டிடம் கட்டுமான பணி மும்முரம்
x
தினத்தந்தி 21 Nov 2021 6:14 PM IST (Updated: 21 Nov 2021 6:14 PM IST)
t-max-icont-min-icon

புதிய கட்டிடம் கட்டுமான பணி மும்முரம்

அனுப்பர்பாளையம், 
 அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒருசில பகுதிகள் பிரிக்கப்பட்டு  திருமுருகன்பூண்டி போலீஸ் நிலையம் உருவாக்கப்பட்டது. தற்போது திருமுருகன்பூண்டி கோவில் அருகே ஒரு சிறிய கட்டிடத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து திருமுருகன்பூண்டியை அடுத்த ராக்கியாபாளையத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு போலீஸ் நிலைய புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. ரூ.1 கோடியே 70 லட்சம் மதிப்பில் 3 தளங்களுடன் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

Next Story