டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 21 Nov 2021 9:29 PM IST (Updated: 21 Nov 2021 9:29 PM IST)
t-max-icont-min-icon

நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெளிப்பாளையம்:
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் சந்திரவேல் முன்னிலை வகித்தார். நெடுஞ்சாலை துறை பணியாளர் சங்க மாநில தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
தஞ்சையில் நடைபெற்ற மாநில மாநாட்டில் டாஸ்மாக் நிர்வாகத்தில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டிய டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணனை  பணி இடை நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ரேஷன் கடை பணியாளர் சங்க மாநில இணை செயலாளர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் சுரேஷ் கண்ணன், டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் மோகன், மாவட்ட செயலாளர் ராமன், பள்ளி விடுதி பணியாளர் சங்கம் மாநில தலைவர் புகழேந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story